Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th August 2024 17:49:03 Hours

படையலகுகளுக்கு இடையிலான கிரிக்கெட் 2024 ல் இராணுவ மகளீர் படையணி தலைமையக அணி வெற்றி

படையலகுகளுக்கிடையிலான கிரிக்கெட் 2024 இன் இறுதி போட்டிகள் 2024 ஆகஸ்ட் 21, அன்று வவுனியா, கொக்கெலிய 56 வது காலாட் படைப்பிரிவு மைதானத்தில் நடைபெற்றது. 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், படையணி தலைமையகம், 1, 7, 2 (தொ) மற்றும் 3 (தொ) வது இலங்கை இராணுவ மகளிர் படையணி ஆகிய இலங்கை இராணுவ மகளிர் படையணியின் ஐந்து அணிகள் போட்டியில் பங்குபற்றினர்.

இறுதி போட்டியில் இராணுவ மகளிர் படையணி தலைமையக அணி மற்றும் 3 (தொ) வது இலங்கை இராணுவ மகளிர் படையணி ஆகியன மோதிக் கொண்டன. இராணுவ மகளிர் படையணி தலைமையக அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது. இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையக அணியின் லெப்டினன் ஓஎஸ்என் ஜயவர்தன போட்டியின் ஆட்டநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப் போட்டியில் பிரதம விருந்தினராக 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இலங்கை இராணுவ மகளீர் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் கலந்து கொண்டு சாம்பியன் கிண்ணம் மற்றும் விருதுகளை வழங்கினார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.