13th July 2024 21:42:16 Hours
படையலகு பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண்.49 தியத்தலாவவில் உள்ள குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் 10 மே 2024 முதல் 11 ஜூலை 2024 வரை நடத்தப்பட்டது. குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை தளபதி பிரிகேடியர் ஆர்பீ முனிபுர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் இந்த பாடநெறி நடைபெற்றது. 16 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இப் பாடநெறியில் கலந்துகொண்டனர்.
நிறைவு விழா 11 ஜூலை 2024 அன்று நடைபெற்றதுடன் 14 வது இலங்கை பொறியியல் சேவைகள் படையணியின் கேப்டன் எம்என்பீ பெர்னாண்டோ பாடநெறியின் சிறந்த மாணவருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.