06th March 2023 08:20:47 Hours
படையலகு பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி (1)- 2023 சான்றிதழ் வழங்கும் விழா மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் மார்ச் 01 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதி கேணல் குமார ரணதுங்கமகே பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
ஒரு மாத கால பாடநெறியை 04 அதிகாரிகள் மற்றும் 39 சிப்பாய்கள் பயின்றனர். பாடநெறியின் சிறந்த மாணவராக லெப்டினன் பிஎம்ஐஆர் பலாபத்வல விருது பெற்றார்.
பரிசளிப்பு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.