Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st August 2023 19:31:00 Hours

படையணிகளுக்கு இடையிலான முப்போட்டி சாம்பியன்ஷிப் போட்டி எம்பிலிப்பிட்டியவில்

படையணிகளுக்கு இடையிலான முப்போட்டி சாம்பியன்ஷிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஓகஸ்ட் 27) எம்பிலிப்பிட்டியவில் 12 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 72 போட்டியாளர்களின் பங்குபற்றுதலுடன் எம்பிலிப்பிட்டியவில் உள்ள சந்திரிகா குளக்கட்டில் இடம்பெற்றது.

இப் போட்டிகளில் 750 மீ நீச்சல், 20 கிமீ சைக்கிள் ஓட்டுதல் மற்றும் 5 கிமீ ஓட்டம் போன்றன இடம் பெற்றன.

இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியும் இராணுவ முப்போட்டி தலைவருமான மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இப் போட்டியில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி இரண்டாம் நிலைக்கு தள்ளபட்டு, இலங்கை பீரங்கி படையணி சம்பியன்ஷிப்பைப் பெற்றுக்கொண்டது.

தனிப்பட்ட திறன்கள் பின்வருமாறு:

ஆண்கள் புதியவர்கள்

1 ஆம் இடம் - கன்னர் எம்சீபீ மெரிங்ககே - இராணுவ பீரங்கி படையணி

2 ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் பிடி பிரியங்கர – விஜபாகு காலாட் படையணி

3 ஆம் இடம் - லான்ஸ் பொம்படியர் எச்சிகே சுகதபால - இராணுவ பீரங்கி படையணி

ஆண்கள் சாம்பியன்

1 ஆம் இடம் - சிப்பாய் ஜிஏசிஎஸ் விக்கிரமஆராச்சி - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

2 ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் எம்பீஎஸ்ஆர் பிரியதர்ஷன - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

3 ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் எச்பிஏ சந்திரசிறி - இராணுவ போர் கருவி படையணி

பெண்கள் சாம்பியன்

1 ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் எச்கேஐடி உதயகுமாரி - இராணுவ மகளிர் படையணி