03rd March 2025 15:52:17 Hours
தியதலாவை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் இராணுவ இலகுரக ஆயுத சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படையணிகளுக்கிடையிலான துப்பாக்கி சூட்டு போட்டி - 2025 ஆனது 2025 மார்ச் 02 ஆம் திகதி நிறைவடைந்தது.
2025 பெப்ரவரி 20 முதல் 26 வரை நடைபெற்ற இப்போட்டி குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் தளபதியும் இராணுவ இலகுரக ஆயுத சங்கத்தின் தலைவருமான பிரிகேடியர் ஆர்பீ முனிபுர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது. 22 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 318 போட்டியாளர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். அவர்கள் திறந்த, சேவை படையணிகள் மற்றும் புதியவர்கள் என மூன்று பிரிவுகளின் கீழ் போட்டியிட்டனர்.
விருது வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. 2025 பெப்ரவரி 27 அன்று இடம் பெற்ற விருது வழங்கும் விழாவில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 2025 மார்ச் 02 ஆம் திகதி நடைபெற்ற இறுதி விருது வழங்கும் விழாவில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
படையணிகளுக்கு இடையிலான துப்பாக்கி சூட்டு போட்டி - 2025 முடிவுகள் பின்வருமாறு:
1. திறந்த பிரிவு
அ. விசேட படையணி - சம்பியன்
ஆ. கெமுனு ஹேவா படையணி – இரண்டாம் இடம்
இ. கஜபா படையணி – மூன்றாம் இடம்
2. புதியவர்கள் பிரிவு
அ. விஷேட படையணி - சம்பியன்
ஆ. கொமாண்டோ படையணி – இரண்டாம் இடம்
இ. இயந்திரவியல் காலாட் படையணி – மூன்றாம் இடம்
3. சேவை படையணி பிரிவு
அ. இலங்கை இராணுவ சேவைப் படையணி - சம்பியன்
ஆ. இலங்கை இராணுவ பொலிஸ் படையணி – இரண்டாம் இடம்
இ. பொறியியல் சேவைகள் படையணி – மூன்றாம் இடம்
4. சிறந்த துப்பாக்கி சூட்டு வீரர் (திறந்த பிரிவு) – கெமுனு ஹேவா படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி I டபிள்யூபீஎன் தம்மிக்க
5. சிறந்த துப்பாக்கி சூட்டு வீரர் (புதியவர்கள் பிரிவு) - விஷேட படையணியின் லான்ஸ் கோப்ரல் ஏஎஸ் செனவிரத்ன
6. சிறந்த துப்பாக்கி சூட்டு வீரர் (சேவை படையணி பிரிவு) – இலங்கை இராணுவ படையணியின் லான்ஸ் கோப்ரல் டிஎம்பீகே பியதிஸ்ஸ
7. பிரிகேடியர் மற்றும் மேஜர் ஜெனரல் நிலை பிரிவு – இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பிரிகேடியர் ஏச்ஏஏஎன்சீ பிரபாத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ
8. லெப்டினன் கேணல் மற்றும் கேணல் நிலை பிரிவு - இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி லெப்டினன் கேணல் எம்கேடிஎஸ் மாயாதுன்ன
9. கள அதிகரிகள் பிரிவு - கஜபா படையணியின் மேஜர் எஸ்ஏடிடி விமலசூரிய பீஎஸ்சீ
10. சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் பிரிவு - கொமாண்டோ படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II ஏஏயூஐ சமரசிங்க