Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th July 2024 20:31:03 Hours

படையணிகளுக்கிடையிலான கராத்தே – 2024 நிறைவு

இராணுவ கராத்தே கழக தலைவரான மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை கவசவாகன படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களின் முன்னிலையில் 23 ஜூலை 2024 அன்று பனாகொட இராணுவ உடற்பயிற்சி கூடத்தில் படையணிகளுக்கிடையிலான இராணுவ கராத்தே சம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகள் 2024 ஜூலை 19 முதல் 22 வரை நடைபெற்றன.

இறுதி போட்டியில் இலங்கை காலாட் படையணியை தோற்கடித்து இலங்கை சிங்க படையணி ஆண்களுக்கான மொத்த சாம்பியன்ஷிப்பை சுவீகரித்துக்கொண்டது. இதேவேளை, பெண்களுக்கான மொத்த சம்பியன்ஷிப்பை இலங்கை இராணுவ பொது சேவை படையணி பெற்றுக்கொண்டதுடன், இலங்கை சமிக்ஞைப் படையணி இரண்டாம் இடத்தை பெற்றன.

பின்வரும் வீரர்கள் தனிப்பட்ட முறையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகப் பாராட்டப்பட்டனர்:

சிறந்த வீரர் – கோப்ரல் எஸ்ஏஎம்டிபீ குமார - இலங்கை இலேசாயுத காலாட் படையணி

சிறந்த வீராங்கனை - கோப்ரல் டிஎம்ஆர் பிரேமச்சந்திர - இலங்கை இராணுவ மகளிர் படையணி