19th July 2023 18:26:59 Hours
24 வது காலாட் படைப்பிரிவின் 241 வது பிரிகேடின் 18 வது விஜயபாகு காலாட் படையணியின் 90 சிப்பாய்கள், பொதுமக்களுடன் இணைந்து சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் கல்முனை கடற்கரையில் சிரமதானத் திட்டத்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 14) முன்னெடுத்தனர்.
24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் படையினர் கல்முனை கரையோரப் பகுதியில் மாசுபடுத்தும் கடதாசிகள், பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் மற்றும் ஏனைய மாசுபொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
241 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எல்எஸ்டிஎன் பத்திரன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களினால் இத் திட்டம் ஒருங்கணைக்கப்பட்டதுடன், சிரமதானப் பணியில் படையினருடன் சுமார் 60 பொதுமக்கள் இணைந்து கொண்டனர்.
24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மற்றும் 241 வது காலாட் பிரிகேட் தளபதியும் இச் சிரமதானப் பணியில் கலந்து கொண்டனர்.