04th September 2024 15:58:00 Hours
6 வது இலங்கை கவச வாகன படையணியின் ஏற்பாட்டில் படைப்பிரிவு தளபதி சவால் கிண்ண கூடைப்பந்து போட்டி – 2024 இன் இறுதிப் போட்டி 01 செப்டம்பர் 2024 அன்று 4 வது இலங்கை கவச வாகன படையணி கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது.
22 வது காலாட் படைப்பிரிவின் படையலகுகள் மற்றும் பிரிகேட்களை சேர்ந்த 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி 2024 ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 01 வரை நடைப்பெற்றது. பரபரப்பான இறுதிப் போட்டியில், 6 வது இலங்கை கவச வாகன படையணி வெற்றிபெற்றதுடன் 2 (தொ) கஜபா படையணி இரண்டாம் இடத்தை பெற்றது. இந் நிகழ்வில் 22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.