Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th February 2024 13:50:49 Hours

நேபாளத்தில் 'சாந்தி பிரயாஸ் - IV' களப் பயிற்சி நிகழ்வுக்கு படையினர் தயார் நிலையில்

நேபாள ஐ.நா சபையின் களப் பயிற்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னரான, புத்துணர்ச்சி பாடநெறி 08 பெப்ரவரி 2024 அன்று இலங்கையின் அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நிறைவிற்கு வந்தது.

2024 ஜனவரி 16 முதல் 08 பெப்ரவரி 2024 வரை 02 அதிகாரிகள் மற்றும் 19 சிப்பாய்களுடன் புத்துணர்ச்சி பாடநெறி இடம்பெற்றதுடன் பயிற்சிக்கு முன்னர் பயிற்சி அம்சங்களின் முக்கிய விடயங்களை உள்ளடக்கிய தொழில்முறை அமைதி காக்கும் வீரர்களை உருவாக்குவதில் பாடநெறியில் கவனம் செலுத்தப்பட்டது.

சாந்தி பிரயாஸ் - IV களப் பயிற்சி நிகழ்வு நேபாளம் பிரேந்திரா அமைதி நடவடிக்கை பயிற்சி நிலையத்தில் 2024 பெப்ரவரி 20 முதல் 2024 மார்ச் 04 வரை நடைபெறவுள்ளது.

இலங்கையின் அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சி.ஏ.ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களினால் நிறைவுரை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.