Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th July 2023 00:58:42 Hours

நெலுகல தொல்பொருள் இடங்கள் புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப்படல் வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று பேரில்லாவெளி கிராம அலுவலர் பிரிவில் முந்நூற்று ஐம்பது ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இடம் 16க்கும் மேற்பட்ட சிலைகள் மற்றும் தொல்பொருட்களை கொண்ட நெலுகல பௌத்த இடிபாடுகள் சிதைவடைந்த சிலைகள், பாறைக் குகைகள், கல்வெட்டுகள், குளங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. கிமு 2 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுக்குரிய பௌத்த தூபியுடன் கூடிய இடிபாடுகள் பழங்காலப் பெருமையை மீண்டும் கொண்டு வருவதற்காக விரைவில் புனரமைக்கப்பட உள்ளன.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யு.டி விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆரஎஸ்டிஎஸ் பீஎஸ்சி புதன்கிழமை (12) தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து மகா சங்கத்தினரின் 'செத்பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.

வண. கேடகும்புரே தம்மராம தேரர், 23 வது காலாட் படைபிரிவின் பிரிகேடியர் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி , 232 வது காலாட் பிரிகேட் தளபதி, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிவில் விவகாரங்களின் பிரதான இணைப்பாளர், கிழக்கின் சிவில் விவகாரங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் , 12வது இலங்கைப் தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் சிலர் புனரமைப்புத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.இந்த மக்கள் வசிக்காத பகுதியில் உள்ள நெலுகல இடிபாடுகள் மற்றும் பிற தொல்பொருள் இடங்கள் புதையல் வேட்டைக்காரர்கள் மற்றும் மரம் வெட்டுதல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன.