11th November 2024 06:30:57 Hours
இலங்கை நெக்ஸ்ட் ஜென் ஹொக்கி முன்னேற்ற கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘நெக்ஸ்ட் ஜென்’ சாம்பியன்ஷிப் போட்டி தொடர் 2024 நவம்பர் 09 அன்று கொழும்பு செயற்கை ஹொக்கி புல்வெளியில் நடைபெற்றது.
இலங்கையின் தலைசிறந்த விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டியாளர்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர்.
பங்கேற்பாளர்களில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் தேசிய அணிகளைச் சேர்ந்த வீரர்கள், கழகங்களில் உள்ள உள்நாட்டு வீரர்களுடன் போட்டியிட்டனர்.
எந்தவொரு வெளிநாட்டு வீரர்களும் இல்லாமல் இலங்கை இராணுவ அணி போட்டிகள் முழுவதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டியில் 3-2 என்ற புள்ளி கணக்கில் விமானப்படை அணியை வென்றது.
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சார்ஜன் குசல் திலகசிறி அவர்களுக்கு போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் போட்டியின் சிறந்த வீரருக்கான விருதும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் சிப்பாய்கள், நெக்ஸ்ட் ஜென் ஹொக்கி முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.