Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th August 2023 20:15:50 Hours

நுண்பொருளியல் நிர்வாகம் மற்றும் வழிமுறைகளுக்குள் வாழ்வது' என்பது தொடர்பில் கலந்துரையாடல்

"நுண்ணியல் பொருளாதாரங்களை நிர்வகித்தல் மற்றும் வழிமுறைகளுக்குள் வாழ்வது" என்ற தொனிப்பொருளில் உளவியல் செயற்பாடுகள் பணிப்பாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முழு நாள் செயலமர்வு 09 ஓகஸ்ட் 2023 அன்று இலங்கை இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இராணுவத்தில் பணியாற்றும் உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய நிதி முகாமைத்துவம் மற்றும் நிதி சிக்கல்களைக் கருத்தில் கொண்டு ஒருவர் எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்து இராணுவ உறுப்பினர்களுக்கு கற்பிக்கும் நோக்கத்துடன் நிதி முகாமைத்துவம் பற்றிய புகழ்பெற்ற விரிவுரையாளர் திரு அமிந்த டி சில்வா அவர்களால் இந்த செயலமர்வு நடத்தப்பட்டது.

இதன்படி, இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றும் 42 அதிகாரிகள் மற்றும் 153 சிப்பாய்கள் இந்த ஒரு நாள் பயிற்சி பட்டறையில் பங்குபற்றியதுடன், 487 அதிகாரிகள் மற்றும் 8675 சிப்பாய்கள் சூம் தொழிநுட்ப தளத்தின் மூலம் அனைத்து பாதுகாப்புப் படை தலைமையகத்தின் காலாட் படை பிரிவுகள், காலாட் பிரிகேட்கள், படையணி தலைமையகங்கள், படையலகுகள் மற்றும் பயிற்சிப் பாடசாலைகளில் இணைந்தனர்.

இந்த நிகழ்விற்கு முக்கியத்துவம் சேர்க்கும் வகையில் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜே.ஏ.ஆர்.எஸ்.ஜே.கே ஜயசேகர மற்றும் உளவியல் நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.எம்.பீ.எஸ்.பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஆகியோரும் செயலமர்வில் இணைந்தனர்.