25th May 2024 13:23:10 Hours
11 வது இலங்கை பொறியியல் படையணி படையினரால் 2024 மே 22 அன்று நுணாவிலில் ஒரு ஆதரவற்ற குடும்பத்திற்கான புதிய வீடிற்கான அடிக்கல் நாட்டப்பட்து. இத் திட்டமானது 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூபீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 523 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எஸ்எம்சிஏஎஸ் சமரதுங்க ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் உள்ள இமேஜிங் இன்டர்நேஷனல் கெம்பாஷன் (பிரைவேட்) லிமிடெட் இன் நன்கொடையில் இத் திட்டம் படையினரால் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பாஸ்டர் தொண்டு அமைப்பின் உறுப்பினர்களான ஏ அருள், கிறிஸ்தவ மத தலைவர்கள் என்ற தொண்டு நிறுவன உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.