Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th October 2023 22:16:16 Hours

நிலச்சரிவினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான மக்கள் மத்திய படையினரால் இடமாற்றம்

பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்த பிரதேசத்தில் மகல்தெனியவில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் அச்சுறுத்தலுக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த 149 பொதுமக்களை அவர்களது பாதுகாப்பிற்காக சனிக்கிழமை (ஒக்டோபர் 14) பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த உடனடி பேரழிவு பற்றிய ஆரம்ப அறிக்கைகள் கிடைத்தவுடன் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வீ யூஎஸ்பீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ அவர்கள் அவசரநிலைக்கு உடனடியாக பதிலளித்தது மற்றும் அந்த பொதுமக்களின் இடமாற்றத்திற்கு உதவ இராணுவ படையினர் குழுவை அனுப்பினார்.