17th May 2023 06:38:30 Hours
மஹரகம மற்றும் பம்பலப்பிட்டி ஸ்ரீ வஜிரஞான தர்ம பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பின் அமெரிக்காவில் வசிக்கும் திரு ரவி ரவீந்திரனின் பெருந்தன்மையால் யாழ் குடாநாட்டில் உள்ள நாவட்குழி லக்தரு பாலர் பாடசாலையின் 26 சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் வழங்கப்பட்டன.
52 வது காலாட் படைபிரிவின் படையினர் 523 வது காலாட் பிரிகேட் மற்றும் 11 கள பொறியியல் படையணியுடன் இணைந்து டி-சேட்கள், மேசைகள், கதிரைகள் மற்றும் ஆசிரியர்களுக்கான சாரிகள் பாடசாலை சீருடைகள் ஆகியவற்றை விநியோகித்தனர். அப் பிள்ளைகளுக்கு சரியான குடிநீர் வசதி இல்லாமையால் அனுசரனையாளர்களின் உதவியுடன் பாடசாலை வளாகத்திற்குள் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையமும் நிறுவப்பட்டது.
52 வது காலாட் படைபிரிவு தளபதி மற்றும் 523 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலுக்கமைய பாலர் பாடசாலை வளாகத்தில் 11 வது களப் பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் நன்கொடைகள் வழங்கப்பட்டன.