Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th January 2024 19:54:32 Hours

நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் சிவில் பணியாளர்களுக்கு 200 உலர் உணவுப் பொதிகள்

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் தலைமையில் 2024 ஜனவரி 16 ம் திகதியன்று நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் சிவில் ஊழியர்களுக்கு 200 உலர் உணவுப் பொதிகள் மருத்துவமனை வளாகத்தில் வழங்கப்பட்டன.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் திருமதி. சுமுது ரத்நாயக்க அவர்களினால் திருமதி. ஜானகி லியனகே அவர்கள் அந்த இடத்திற்கு வரவேற்கப்பட்டதுடன், ஜானகி லியனகே அவர்களினால் நிவாரணப் பொதிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.