Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2024 20:05:24 Hours

நாடளாவிய ரீதியில் இராணுவம் தைப் பொங்கலைக் கொண்டாடுகின்றது

55 வது காலாட் படைப்பிரிவு 12 ஜனவரி 2024 அன்று பூநகரின் நகரில் ‘தைப் பொங்கல் தின’ கொண்டாட்டத்தை பல தமிழ் மக்களுடன் நடாத்தினர்.

55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.கே.என்.சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலில் 552 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் பூநகரின் பிரதேச செயலாளர் திரு. டி அகிலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இலங்கை இராணுவ பாரம்பரிய நடனக் கலைஞர்கள் மற்றும் அப்பகுதியின் நடனக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்களால் நிகழ்வு வண்ணமயமானது.

இதேவேளை, 22 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 108 மாணவர்களுக்கு பாடசாலை பைகள் மற்றும் புத்தகங்களை வழங்கியதுடன், பூநகரி பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் பிரதேசத்தில் சிறந்து விளங்கும் ஐந்து விவசாயிகளுக்கு கௌரவிப்பும் வழங்கப்பட்டது.

மேலும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டன

இதேவேளை, வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தைப் பொங்கல் விழா 2024 ஜனவரி 15 ஆம் திகதி ஓமந்த ரந்திவோலை கண்ணகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

ரந்திவோலை கண்ணகி அம்மன் கோவில் பிரதம குருக்கள் பிரம்மஶ்ரீ சோம சுந்தர நாகராசா குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையில், மாவட்ட செயலாளர் திரு.பீ.ஏ.சரத் சந்திர, 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இந்து பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

புதுக்குடியிருப்பு முருகன் ஆலயத்தில் திங்கட்கிழமை (ஜனவரி 15) அப்பகுதி மக்களுடன் இணைந்து 68 வது காலாட் படைப்பிரிவின் படையினர் இந்து தைப் பொங்கல் விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடினர். 68 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ , 593 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பக்தர்கள் இந்த சமய வழிபாடுகளில் பங்கேற்றனர்.

தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு முருகன் ஆலயத்தில் தைப் பொங்கல் விழாவினை ஏற்பாடு செய்ய 593 வது காலாட் பிரிகேட் படையினர் உதவினர்.