27th April 2023 18:35:29 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய, ஆளனி நிர்வாக பணிப்பகம் மற்றும் இராணுவ பௌத்த சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தர்ம பிரசங்க திட்டம் புதன்கிழமை (ஏப்ரல் 26) இடம் பெற்றதுடன், மீண்டும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக கேட்போர் கூடத்திலும் இடம் பெற்றது.
வண. பெலிஹுலோய சீல சமஹித யோகஸ் ரமயவின் பிரதமகுரு வாண. பலாங்கொட ரத தேரர், படையினருக்கு இடையே தார்மீக வளர்ச்சி மற்றும் ஆன்மீக புரிதலை மேம்படுத்தும் நோக்கத்துடன் பிரசங்கத்தை நடாத்தினார். அவரது சொற்பொழிவு நினைவாற்றல், மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு போன்றவற்றை உள்ளடக்கி இருந்தது.
அதன்படி, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிபிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர்களால் தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிகழ்வில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 600 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
இச் செயற்திட்டம் இராணுவத் தளபதியின் அறிவுறுத்தல்களின்படி முதலாம் படை மற்றும் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திலும் நடத்தப்பட்டது.