08th October 2023 20:39:54 Hours
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் நன்கொடையாளர்கள் மற்றும் அனுசரணையாளர்களின் ஆதரவுடன் கன்னடுகேணி தமிழ்க கலவன் பாடசாலை, கொக்குத்தொடுவாய் தமிழ் பாடசாலை, கொக்கிளாய் தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் கொக்கிளாய் சிங்கள கலவன் பாடசாலையின் 201 மாணவர்களுக்கு ஒக்டோபர் 3 ஆம் திகதி முல்லைத்தீவு வித்யானந்தா தேசிய கல்லூரியில் காலனிகள் வழங்கப்பட்டன.
முல்லைத்திவு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்டார். இத் திட்டத்திற்கு கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான திரு.பிரசாத் லொகுபாலசூரிய, அருட்தந்தை எஸ்.ஜே. சதீஷ் குமார், முள்ளியவளை ஐ.ஓ.சி யின் முகாமையாளர் திரு.செல்ல தம்பி திலக்ஷன் மற்றும் முல்லைத்தீவு பிரதேச அனுரணையாளர் திரு.கே.ஜோகேஸ்வரன் ஆகியோர் நிதியுதவியை வழங்கினர்.
இந்நிகழ்வு 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 592 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் 592 காலாட் பிரிகேட் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. 14 (தொ) கெமுனு ஹேவா படையினர் நிகழ்வின் வெற்றிக்காக தமது ஆள்பலத்தையும் ஆதரவையும் வழங்கினர்.
இந்த விநியோக நிகழ்வில் 59 காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யுஎஸ்பீ பீஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்குபற்றினர்.