Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th August 2023 19:21:56 Hours

நட்புரீதியான கைப்பந்தாட்ட போட்டியில் சிஷெல்ஸ் அணியை வீழத்திய இராணுவ ஆண்கள் அணி

பனாகொடை இராணுவ உடற் பயிற்சி பாடசாலையின் உள்ளக விளையாட்டரங்கில் புதன்கிழமை (ஆகஸ்ட் 02) சீசெல்ஸ் தேசிய கைப்பந்தாட்ட அணிக்கும் இலங்கை இராணுவ கைப்பந்தாட்ட அணிக்குமிடையிலான சிநேகபூர்வ கைரப்பந்தாட்டப் போட்டியில் இராணுவ அணி வெற்றிபெற்றது.

இராணுவ ஆண்கள் அணி பரபரப்பான மோதலில் சீஷெல்ஸ் தேசிய கைப்பந்து ஆண்கள் அணியைத் தோற்கடித்து 32 - 24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றதுடன், சீஷெல்ஸ் மகளிர் அணி, கடுமையாக போட்டியிட்டு 22 - 19 என்ற புள்ளிக்கணக்கில் இராணுவ மகளிர் அணியை வென்றது.

மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் சீஷெல்ஸ் தேசிய கைப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் இலங்கை தேசிய கைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர்களுக்கு நல்லெண்ணம் மற்றும் பாராட்டுக்கான அடையாளமாக இரண்டு நினைவு சின்னங்களை வழங்கினார்.

சீசெல்ஸ் தேசிய கைப்பந்தாட்ட அணி சனிக்கிழமை (ஜூலை 29) இலங்கையை வந்தடைந்ததுடன், தங்கியிருந்த காலத்தில் இரு நாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் பயிற்சியுடன் பொழுதுபோக்கிற்காக நேரத்தையும் களித்தனர்.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இராணுவ கைப்பந்தாட்ட குழுவின் தலைவர் மற்றும் இலங்கை தேசிய கைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அதிகாரிகளும் இணைந்து இறுதிப் போட்டியை கண்டு களித்தனர்.