20th December 2024 11:59:11 Hours
2024 டிசம்பர் 14 அன்று 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி எல்லைக்குள் வரும் நட்டங்கண்டால் பகுதியில் கு சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. பெரும் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல குடும்பங்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்ததுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு நட்டங்கண்டால் பாடசாலையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்த மனிதாபிமான முயற்சி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் கருத்தின் கீழ் 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎன்டி கருணாபால ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் துன்பத்தில் உள்ள சமூகங்களுக்கு சரியான நேரத்தில் உதவிகளை வழங்குவதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்டது. 561 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிடி பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சி பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கேஏகே ஹேவபாதகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் உதவியுடன் இந்த நிகழ்ச்சித்திட்டம் நிறைவேற்றப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை இராணுவத்துடன் இணைந்துள்ள சமூகப் பொறுப்புள்ள அமைப்பான ஈ-சொப்ட் (E-Soft) இன் முதுமானி கற்கை மாணவர்களால் நன்கொடை வழங்கப்பட்டது.