28th August 2023 22:49:51 Hours
உளவியல் ஆலோசகர் திருமதி பாக்யா அபேசிங்க, படையினரின் மனநிலையை குணப்படுத்தும் மேம்படுத்தும் நோக்குடன், பயிற்சி நாளுடன் இணைந்து 23 ஓகஸ்ட் 2023 இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தலைமையகத்தில் 'போராட்ட குடும்ப வாழ்க்கை' என்ற தலைப்பில் ஈர்க்கக்கூடிய வகையில் விரிவுரை ஒன்றை நிகழ்த்தினார்.
மேற்படி விரிவுரையானது இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நெருக்கம், ஆர்வம், அர்ப்பணிப்பு போதைப்பொருள் மற்றும் காதல் தொடர்பில் குடும்பத்தில் வலுவான முழுமையான உறவை உருவாக்குதல் தொடர்பாக மற்றும் கருப்பொருள் பாடல்கள் மற்றும் இசையைப் பயன்படுத்தி விரிவுரை நிகழ்தப்பட்டது.
மேற்படி விரிவுரையானது தொண்டர் படையணியின் பிரதித் தளபதியான மேஜர் ஜெனரல் என்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ, பயிற்சிப் பரிசோதகரான பிரிகேடியர் டபிள்யூஜிபீ சிசிர குமார ஆர்எஸ்பீ ஆகியோரின் பங்குபற்றலுடன் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் ஒன்றுகூடலுடன் இவ் விரிவுரை இடம் பெற்றது.