Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th May 2020 23:17:08 Hours

தொண்டர் படையணிக்கு இராணுவ தளபதி விஜயம்

139 வருட கால வரலாற்றைப் பதிவை கொண்ட கொஸ்கமை இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன மற்றும் இலங்கை பொறியியலாளர் படையணியின் படைத் தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் நாட்டிக்கான நாட்டுப்பற்றுள்ள தொழில் சார் வல்லுநர்களின் உருவாக்கத்திற்கான பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் படை வளாகத்தில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் முழு ஆசீர்வாதத்துடன் திறந்துவைக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை 29 ம் திகதி இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி அவர்களின் அழைப்பை ஏற்று நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பாரிய மேம்பாட்டுத் திட்டங்களை பார்வையிட்டத்துடன் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பல வசதிகள் கொண்ட சீத்தாவாக்கை ரெண்டோஸ் மைதானத்தின் பிரதான மண்டபம் படையினருக்கான புதிய விடுதி மற்றும் தலைமையகத்தின் பயன்பாட்டு மத்திய நிலையத் தொகுதி மற்றும் தொண்டர் படையணியின் ஹொனர் மண்டபத்தின் புனரமைப்பு என்பவற்றை திறந்து வைத்தார்.

இந் நிகழ்விற்கு வருகை தந்த பிரதான அதிதியை இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களால் வரவேற்கப்பட்டது தொண்டர் படையணியின் படையினரால் இராணுவ மரியாதைகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கேற்றலுடன் பிரதம அதிதி மகா சங்க உறுப்பினர்களுக்கு வெற்றிலை கொடுத்து ஆசிர் வாதங்களை பெற்றுக்கொண்டார் தொடர்ந்து, இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் மறுசீரமைப்பு திட்டம், பல் விளையாட்டு பயிற்சி மற்றும் பல இராணுவ மேம்பாட்டு பயிற்சிக்கான மண்டப தொகுதி என்பவற்றின் நினைவு பலகைகளை திறந்து வைத்து உரையாற்றினார்.

லெப்டினன்ட் ஜெனரல் சில்வா அவர்கள் நினைவு பலகையையும் பிரதான நுழைவாயிலில் நாடாவை வெட்டி புதிய படையினர் விடுதி கட்டிடத்தை திறந்து வைத்து கட்டிடத்தின் வசதிகளை பார்வையிட்டதன் பின்னர் பிரதான கேட்போர் கூடம் சென்றார், அங்கு தொண்டர் படையணியில் சேவை செய்யும் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இருந்தனர். காத்திருந்தனர். 2020 ல் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக முழுமையான முன்வைப்பொன்று செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி, அதிகாரிகள் மற்றும் படையினருக்கு தொலைநோக்கு மேம்பாட்டுத் திட்டதிற்காக பாராட்டினார். மற்றும் எதிர்கால முன்னேற்றங்களுக்காக தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இராணுவ தளபதி தனது உரையில் நாட்டிலிருந்து வைரஸை ஒழிப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் நாட்டு சமூகத்தின் இயல்பு நிலையைக் கொண்டு வருவதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். அத்துடன் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் கேட்போர் கூடத்தில் சிரேஸ்ட பதவி அதிகாரிகள் மற்றும் இராணுவ பணிப்பாளர்கள் அமைப்பு அபிவிருத்தி அணுகுமுறைகள் தொடர்பாக பிரதம அதிதிக்கு முன்மொழியப்பட்டது.

‘2020 க்காக முன்மொழியப்பட்ட மாபெரும் திட்டத்தில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் முழுமையான பயிற்சி வகிப்பாங்கும் கடமையும் கொள்கைகள் மற்றும் சட்டத் திருத்தங்கள், நிறுவன கட்டமைப்பு மேம்பாடு, தலைமையக வளாக அபிவிருத்தி, ஆளணி அதிகரிப்பு , தொழிலான்மை அபிவிருத்தி மூலோபாய பயன்பாட்டு திறன் அபிவிருத்தி மற்றும் கௌரவத்தை உயர்த்தல் போன்றவை தொடர்பாக விரிவான கருத்துக்களை உள்ளடக்கியதாக காணப்பட்டது.

தளபதியின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பாராட்டிய இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி வருகையின் அடையாளமாக சிறப்பு நினைவு சின்னம் ஒன்றை வழங்கினார். தளபதி அதிதிகள் கருத்து பதிவுப் புத்தகத்தில் பதிவிட்டார்.

இதன் போது பிரதம பொறியியளாலர், பொதுப் நிரவாக பணிப்பக பாணிப்பாளர் நாயகம், உபகரண பகிர்வு பணிப்பாளர் நாயகம், மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி, பொது நிறைவேற்று கட்டளையாளர், இராணுவ உபகரண தளபதி, இராணுவ சேவை வழங்கல் தளபதி, தொண்டர் படை பிரதி தளபதி, தொண்டர் படை சிரேஸ்ட பதவி அதிகாரிகள், சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய பங்குபற்றினர். affiliate tracking url | Air Jordan