15th May 2024 18:28:46 Hours
சேருவிலவில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பம் ஒன்றுக்கு புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 12 மே 2024 அன்று நடைபெற்றது.
222 வது காலாட் பிரிகேட் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் 9 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அமெரிக்காவில் வசிக்கும் கலாநிதி பூஜா ஷகூர் அவர்கள், சேருவில ராஜ மகா விகாரையின் பிரதமகுருவான வண. அலுதெனிய சுபோதி தேரர் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு, 9 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் நிர்மாணிக்கப்படுவதற்கு நிதி அனுசரணையை வழங்கினார்.
இந்நிகழ்வில் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பி.ஏ.எம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந் நிகழ்வில் 9 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி,அதிகாரிகள்,சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.