08th May 2024 17:30:46 Hours
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடப்ளியுடப்ளியுடப்ளுயுஎம்சீபி விக்கிரமசிங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய மட்ட நீச்சல் பயிற்சி நிகழ்ச்சி 2024 மே 3 முதல் 6 வரை வல்வெட்டித்துறை மாநகரசபையின் நீச்சல் தடாகத்தில் இடம்பெற்றது.
52 வது காலாட் படைபிரிவு 521 காலாட் பிரிகேட் மற்றும் 11 விஜயபாகு காலாட் படையணி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்பகுதியில் வசிக்கும் மாணவர்களிடையே நீச்சல் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் இலங்கை நீர் விளையாட்டு ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
இறுதி பரிசளிப்பு விழா, 52 வது காலாட் படைபிரிவின் தளபதியும், இலங்கை நீர் விளையாட்டு சங்கத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாம்பத் ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சீ அவர்களால், பயிற்சி நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 225 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.