05th July 2023 19:43:18 Hours
தேசிய மற்றும் கனிஷ்ட தேசிய நீச்சல் சம்பியன்ஷிப் – 2023 போட்டியில் நாடு முழுவதும் உள்ள நீச்சல் வீரர்களின் பங்கேற்புடன் ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை சுகததாச விளையாட்டுரங்கு நீச்சல் தடாகத்தில் நடைப்பெற்றது.
இந்த சம்பியன்ஷிப் போட்டியில் பாடசாலை மற்றும் நாடலாவிய ரீதியிலான பல்வேறு விளையாட்டு கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 600 க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் பங்குபற்றினர்.
4 தங்கம், 11 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று இராணுவ அணி தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் - 2023 (ஆண்கள் பிரிவில்) இரண்டாம் இடத்தைப் பெற்றது.
இலங்கை இராணுவ நீர் விளையாட்டுக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் எஸ்யுஎம்என் மானகே இராணுவப் பங்கேற்பாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.