Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th February 2025 18:16:50 Hours

தேசிய குத்துச்சண்டை சாம்பியனுக்கு இயந்திரவியல் காலாட் படையணியினால் விருதுகள் மற்றும் நிதியுதவி

இயந்திரவியல் காலாட் படையணி 2025 பெப்ரவரி 9 அன்று 3 வது இயந்திரவியல் காலாட் படையணியின் கோப்ரல் கே.ஏ.எஸ்.கே. அபேகுணவர்தன அவர்களுக்கு நிதியுதவி வழங்கியது.

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவரை தோற்கடித்து, இவர் 2024 தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் எடை (48-51 கிலோ) பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சீ.கே. வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இந்த நிதி உதவியை வழங்கினார்.