11th December 2024 15:11:36 Hours
தேசிய கயிறிழுத்தல் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 20வது தேசிய கயிறிழுத்தல் சாம்பியன்ஷிப் 2024, பண்டாரவளை நகரசபை மைதானத்தில் 07 டிசம்பர் 2024 அன்று நடைபெற்றது.
இலங்கை இராணுவம் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியதுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் பல்வேறு பிரிவுகளில் ஐந்து சம்பியன்ஷிப்களைப் பெற்றுள்ளது.
பின்வரும் பிரிவுகளில் இராணுவம் சாம்பியன் ஆனது:
• 640 கிலோ (சிரேஷ்ட ஆண்கள்) - சாம்பியன்ஷிப்
• 560 கிலோ (சிரேஷ்ட பெண்கள்) - சாம்பியன்ஷிப்
• 23 வயதுக்குட்பட்டோர் (ஆண்கள்) - சாம்பியன்ஷிப்
• திறந்த பிரிவு (ஆண்கள்) - சாம்பியன்ஷிப்
• திறந்த பிரிவு (பெண்கள்) - சாம்பியன்ஷிப்