Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th January 2024 18:23:22 Hours

தேசிய உள்ளக படகுபோட்டி சாம்பியன்ஷிப் - 2024 இல் இராணுவ படகோட்டிகள் வெற்றி

படகு போட்டி நிலையத்தில் 2024 ஜனவரி 20-21 திகதிகளில் நடைபெற்ற தேசிய உள்ளக படகுப்போட்டி சாம்பியன்ஷிப் - 2024ல் 13 சாதனைகளைப் பெற்று இராணுவ படகோட்டிகள் குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் முப்படை அணிகள், படகோட்டக் கழகங்கள் மற்றும் பாடசாலை அணிகள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தன.

நிகழ்ச்சிகளில் சிறப்பு திறன்கள் பின்வருமாறு:

2000மீட்டர் ஆடவர் திறந்த பிரிவு முதலாம் மற்றும் இரண்டாமிடம்

2000மீட்டர் மகளீர் திறந்த பிரிவு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம்

2000 மீட்டர் ஆடவர் லைட்வெயிட் பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாமிடம்

2000 மீட்டர் மகளீர் லைட்வெயிட் பிரிவில் முதலாமிடம்

23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 2000 மீட்டர் முதலாமிடம்

500மீட்டர் x 4 ஆடவர் திறந்த பிரிவில் முதலாம் மற்றும் மூன்றாமிடம்

500மீட்டர் x 4 மகளீர் திறந்த போட்டியில் முதலாம் இடம்

500மீட்டர் x 4 கலப்புத் திறந்த பிரிவில் முதலாவது இடம்