Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th August 2023 20:34:55 Hours

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு படையினரால் இரத்த தானம்

513 வது காலாட் பிரிகேட்டின் 28 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 150க்கும் மேற்பட்ட சிப்பாய்கள் யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளின் நலனுக்காக தானாக முன்வந்து (ஓகஸ்ட் 19) இரத்ததானம் செய்தனர்.

மருத்துவமனையின் இரத்த வங்கியில் உயிர்காக்கும் இரத்தம் குறைவாக இருந்ததால், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைப் பிரிவு மற்றும் 513 வது காலாட் பிரிகேட்டின் ஒருங்கிணைப்பில் மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர்கள் இந்த திட்டத்தை முன்னெடுத்தனர்.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோர் இத்திட்டத்திற்கு தமது ஆசிகளை வழங்கினர். 513 வது காலாட் பிரிகேட் தளபதி அந்த இடத்தை நெருக்கமாக மேற்பார்வையிட்டார்.