19th September 2024 18:46:56 Hours
2024 செப்டம்பர் 11 முதல் 13 வரை இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில், ஆண்களுக்கான போடு குண்டு போட்டியில் இலங்கை பீரங்கிப் படையணியின் சிப்பாய் டபிள்யூஜேஆர் அல்விஸ் வெண்கலப் பதக்கத்தை வென்று வெற்றியைப் தனதாக்கிகொண்டார். இவர் 15.62 மீட்டர் திறனை வெளிகாட்டி மூன்றாவது இடத்தைப் கைப்பற்றிகொண்டதுடன் விளையாட்டு வீரர்களின் போட்டித் துறையில் விதிவிலக்கான திறமையையும் உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதேபோல், இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சிப்பாய் எச்ஆர்டிஎச் ரணஸ்கல்ல பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இவர் 5.73 மீற்றர் தூரம் பாய்ந்து மூன்றாவது இடத்தைப் பெற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.