03rd February 2023 21:55:12 Hours
தென் சூடான் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையின் கீழுள்ள சிரிமெட் தளம் - 02 வைத்தியசாலையில் சேவையாற்றிய 08 வது குழுவின் 10 அதிகாரிகள் மற்றும் 43 சிப்பாய்கள் குழு இன்று (பெப்ரவரி 03) காலை நாடு திரும்பியது.
ஐக்கிய நாடுகள் சபையின் எத்தியோப்பியா இலக்கம் ஈடி 8604 விமானம் ஊடாக இன்று (03) அதிகாலை 2.30 மணியளவில் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினர். அவர்களை இலங்கை இராணுவ வைத்திய படையணியின் பிரதி நிலையத் தளபதி கேணல் சாந்த குமார, வெளிநாட்டு செயல்பாட்டு பணிப்பகத்தின் பொது பணிநிலை அதிகாரி 1 லெப்டினன் கேணல் எம்எல்கேஜி பீரிஸ், இலங்கை இராணுவ வைத்திய படையணியின் பொது பணிநிலை அதிகாரி 1 லெப்டினன் கேணல் பிஆர் முஹந்திரம், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் வரவேற்கப்பட்டனர்.
அதேவேளை, 9வது குழு வியாழன் (பெப்ரவரி 02) இலங்கையிலிருந்து புறப்பட்டு தென் சூடன் வைத்தியசாலை தளம் -02 கடமைகளைப் பொறுப்பேற்று கொண்டனர்.
தென் சூடான் புதிய சிரிமெட் மருத்துவமனை, அறுவை சிகிச்சை பிரிவு, பிரசவ அறை, தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, பல் அறுவை சிகிச்சை பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, மருந்தகம், மருந்து களஞ்சியம், உள்ளிட்ட சேவைகளை உள்ளடக்கியதுடன், கதிரியக்கவியல் பிரிவு, மருத்துவ ஆய்வுக்கூட வசதி, ஈசிஜி அறை, கிருமி நீக்கம் செய்யும் பிரிவு, பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பிரிவு, மருத்துவக் கழிவுகளை அகற்றும் பிரிவு, பிரேத அறை, தனிமைப்படுத்தப்பட்ட வார்டு மற்றும் ஒரு சலவைக் கூடம் மற்றும் ஆம்புலேட்டரி புத்துயிர் மற்றும் காற்றோட்டம் திறன்களுடன் கூடிய ஏரோ-மெடிக்கல் வெளியேற்றும் வசதி என்பவற்றையும், இலங்கை படையினரால் நிர்வகிக்கப்படுகின்றன.