Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2024 14:33:23 Hours

துரித நடவடிக்கை காராணமாக வெள்ள அபாயத்திலிருந்து கிராமங்கள் மீட்பு

சீரற்ற காலநிலை காரணமாக செட்டிகுளம் கிறிஸ்தவகுளம் கிராமத்தில் உள்ள இறமியன்குளம் குளக்கரை அதிக நீர் பாய்ச்சலின் அழுத்தத்தில் சேதமடைந்து அருகில் உள்ள அதியபுளியங்குளம் கிராமம் மற்றும் அப்பகுதி மக்களின் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது.

27 நவம்பர் 2024 அன்று, 2 வது இயந்திரவியல் காலாட் படையணி கட்டளை அதிகாரி மற்றும் படையினர், அனர்த்த சூழ்நிலையைத் தணிக்கும் வகையில் மணல் மூட்டைகளை வைத்து தற்காலிகமாகச் சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் மஹாவிலச்சிய குளக்கட்டினை பலப்படுத்தும் முகமாக, நீர் மட்டம் உயர்வதால் உடைந்து போகும் அபாயம் உள்ள பகுதிகளில் மணல் மூட்டைகளை வைத்து பலப்படுத்தினர்.

213 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் இந்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது.