25th June 2024 07:46:49 Hours
திஸ்ஸமஹாராம ராஜமஹா விஹாரையின் 124 வது பொசன் மகா பெரஹெரா (ஊர்வலம்) 2024 ஜூன் 15 முதல் 2024 ஜூன் 22 வரை திஸ்ஸமஹாராம விகாரையில் நடைபெற்றது.
12 வது காலாட் படைப்பிரிவு படையினர், விகாரைக்கு வர்ணம் பூசுதல், நிகழ்வு நடைபெற முன்னரும் நடைபெற்ற பின்னரும் விகாரையினை சுத்தம் செய்தல், அன்னதானத்தின் போது உணவு தயாரிப்பதற்கான உதவி, ஒருவாரம் முழுவதும் 'முத்துகுடை பிடித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மேலும், பெரஹராவின் போது 'சேசத்' கலாசார சின்னங்கள் ஏந்திச் செல்வதற்காக 24 பேர் நியமிக்கப்பட்டதுடன், பெரஹரவின் இறுதி நாளில் இராணுவ 'வெஸ்' நடனக் குழுவினரும் ( முகமுடி நடனம்) நிகழ்ச்சியில் இணைந்து கொண்டனர்.
விகாரையின் பிரதமகுரு மற்றும் ‘நிர்வாகசபை’ ஆகியோரின் அழைப்பின் பேரில், 12 வது காலாட் படைப்பிரிவு தளபதி ரந்தோலி பெரஹெர நிகழ்வில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வின் போது, அவர் பிரதான யானையின் மீது 'புத்தகங்கள்' அடங்கிய 'தங்க கலசத்தை' வைத்தார்.
திஸ்ஸமஹாராம ராஜமஹா விஹாரையின் பிரதமகுரு வண. தேவாலேகம தம்ம சேனாநாயக்க தேரர் தனது உரையின் போது, 2024 பொசன் பண்டிகைக்கு இராணுவத்தினரின் பங்களிப்பை பாராட்டினார்.