13th March 2023 19:10:02 Hours
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம அவர்களின் வழிகாட்டலின் பேரில் தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2023 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி திருகோணமலை 'ரொட்ரி கழகத்தின்' ஆதரவுடன் 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் இடம்பெற்றது.
இக்கருத்தரங்கின் நோக்கம் அப்பகுதி இளைஞர்களை, குறிப்பாக பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களின் எதிர்காலத்தில் சமூக விரோதிகளாக மாறாமல் நன்கு திட்டமிடப்பட்ட தொழில் இலக்கை நோக்கி வழிநடத்துவதாகும்.
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம அவர்களின் வழிகாட்டலின் பேரில் தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2023 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி திருகோணமலைநாட்டின் திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் அமைச்சகத்தில் உள்ள தேசிய தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மையத்தின் நன்கு அறியப்பட்ட தொழில்முறை தொழில் ஆலோசகர் திருமதி சந்திமா ரொட்ரிகோ அவர்கள் இந்த கருத்தரங்கை நடாத்தினார்.
இக்கருத்தரங்கில் 150க்கும் மேற்பட்ட பாடசாலை கல்வியை முடித்தவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரினதும் எதிர்கால வாழ்க்கை இலக்குகள் மற்றும் எதிர்காலத்தில் வெற்றியை அடைய அவர்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய வாழ்க்கைப் பாதைகள் குறித்து அறிவூட்டப்பட்டனர்.
கருத்தரங்கின் முடிவில் பங்கேற்பாளர்களுக்கு சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டதுடன், 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் கீழுள்ள பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் ஆதரவுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
22 வது காலாட் படைப்பிரிவின் கீழ் உள்ள பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் நல்லெண்ணத்துடன் கூடிய ஆதரவு ஆகியவை இந்த முயற்சியை ஒரு பெறும் வெற்றியாக மாற்றியது.
இந்த கருத்தரங்கிற்கு திருகோணமலை ரொட்ரி கழகம் இளைஞர்களின் பங்கேற்பை ஒருங்கிணைத்து பெரும் ஆதரவை வழங்கியது.