17th May 2024 15:36:29 Hours
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 'கரிசன் மேனர்' விடுமுறை விடுதி திங்கட்கிழமை (15) தியத்தலாவை ஸ்டேஷன் ஹில்லி முகாமில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.
தியத்தலாவை பிரதேசத்திற்கு வருகை தரும் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
17 வது பொறியியல் சேவை படையணி படையினரின் ஒத்துழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன் விடுதியின் கட்டுமான பணிகள் நிறைவடைந்தன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.