14th September 2023 19:57:38 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.வீ.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலில் பணியாற்றும் படையினரால் வெளிநாட்டு நன்கொடையாளர்களின் உதவியுடன் தியத்தலாவ இராணுவத் தள வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை செவ்வாய்க்கிழமை (செப்டெம்பர்12) அன்பளிப்பாக வழங்கினர்.
இத்திட்டத்தில் மருத்துவமனை அதிகாரிகள், கண்ணாடிகுழாய்கள் ஸ்டெதாஸ்கோப்புகள், வெப்பமானிகள், கத்தரிக்கோல், பிளாஸ்டிக் தட்டுகள் போன்ற மருத்துவ உபகரணங்களை பெற்றனர்.
ஐக்கியராச்சியத்தின் 'சில்வியா அறக்கட்டளை', ஆஸ்திரேலிய உள்ள சிட்னி மற்றும் மெல்போர்ன் மருத்துவமனை உறுப்பினர்களுடன் சேர்ந்து, இலங்கை மருத்துவமனை அம்புலன்ஸ் சேவை சங்கத்தின் பணிப்பாளர் வண. ராஜவல்லே சுபூதி தேரெர் அவர்களின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் டப்ளியுஎம்எஸ்சிகே வணசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, சிவில் அலுவல்கள் அதிகாரி லெப்டினன் கேணல் பூஎச்என்எச் பெரேரா, தியத்தலாவ இராணுவ தள வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி மேஜர் கே.ஆர்.ஏ பெரேரா யூஎஸ்பீ, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.