Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd December 2024 14:33:58 Hours

திம்புலாகல கிராம மாணவர்களுக்கு பாடசாலை எழுதுபொருட்கள் விநியோகம்

231 வது காலாட் பிரிகேட் 233 மாணவர்களுக்கு பாடசாலை எழுதுபொருட்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி திட்டத்தை 2024 டிசம்பர் 21 அன்று திம்புலாகல களுகலே விஜய பராக்கிரம கனிஷ்ட வித்தியாலயத்தில் நடாத்தியது.

இந்த முயற்சி 231 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் 12 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்விற்கு வைட் விஷன் அறக்கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தி திரு.எம்.ஏ.தயாரத்ன, திரு.இந்திக சில்வா மற்றும் திரு.செஹான் தனஞ்சய ஆகியோர் அனுசரணை வழங்கினர்.

23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ. காரியவசம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், திம்புலாகல பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.