30th April 2024 19:55:13 Hours
மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தின் தாங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணை பாடநெறி எண்: 56 இன் நிறைவு விழா 25 ஏப்ரல் 2024 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
2024 மார்ச் 18 முதல் 2024 ஏப்ரல் 24 வரை நடைபெற்ற தாங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணை பாடநெறி எண்: 56 இனை 08 அதிகாரிகள் மற்றும் 33 சிப்பாய்கள் வெற்றிகரமாக முடித்தனர். மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களினால் நிறைவுரை ஆற்றப்பட்டது.
இந்த பாடநெறியில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கெப்டன் எம்.பி.எல் பத்திரகே அவர்கள் முதலாம் இடத்தையும், கெப்டன் ஜி.எச்.ஏ.கே.ஹேவகே அவர்கள் இரண்டாம் இடத்தையும், கெப்டன் என்.ஏ.ஏ. பி.டி.சந்திரசேன மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
தாங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணை பாடநெறி எண்: 56 இன் நிறைவு விழாவில் காலாட்படை பயிற்சி நிலையத்தின் பிரதித் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.