19th August 2024 22:17:11 Hours
22 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், தவுல்வெவ இராணுவ முகாமில் உள்ள நீர் சுத்திகரிப்பு அமைப்பு வெற்றிகரமாக திருத்தப்பட்டு 2024 ஆகஸ்ட் 17 அன்று திறந்து வைக்கப்பட்டது.
பம்பலப்பிட்டிய ராஜா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. அதுலஎலியபுர மற்றும் அவரது ஊழியர்களின் நிதி நன்கொடையின் மூலம் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இலங்கை கடற்படையினர் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கிய அதேவேளை, 6 வது இலங்கை கவச வாகன படையினர் பணியாளர்களுக்கு உதவிகளை வழங்கினர்.
இந்த திறப்பு விழாவை மேஜர் ஜெனரல் பீ.ஏ.எம். பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பாடசாலை மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.