30th May 2023 22:00:24 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 142 வது காலாட் பிரிகேடின் 15 வது இலங்கை பீரங்கி படையணியின் 2 அதிகாரிகள் உட்பட 20 இராணுவ வீரர்கள் அடங்கிய குழு இன்று காலை (30) கோட்டை தீயணைப்புப் பிரிவினருடன் இணைந்து மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் நீர் பவுசர் ஒன்றுடன் மீகொடையில் உள்ள தனியார் தளபாடக் கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க விரைந்தனர்.
அவசர தேவைக்கு பதிலளிக்கும் வகையில், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் படையினர், விரைவாக அந்த இடத்திற்கு விரைந்து வேகமாக பரவிய தீயை கட்டுப்படுத்தினர்.
கோட்டை தீயணைப்புப் பிரிவினருடன் இணைந்து இராணுவத்தினரின் துரித நடவடிக்கையால் சில மணித்தியாலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் முன்னர் வேகமாக பரவும் தீ கட்டுப்படுத்தப்பட்டது.
14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 142 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 15 வது இலங்கை ட்ரோன் பீரங்கிப் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் படையினரின் உதவிகளை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.