01st July 2023 21:52:10 Hours
அதிபரினால் விடுக்கப்பட்ட விசேட வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவினர் 68 கனிஷ்ட மாணவ தலைவர்களுக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட முழு நாள் தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சியை கொட்டாவை வடக்கு தர்மபால வித்தியாலயத்தில் சனிக்கிழமை (ஜூன் 24) நடத்தினர்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் ஆசியுடன் இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ இதனை முழுமையாக ஏற்பாடு செய்து மாணவர்களின் தலைமைத்துவ குணங்கள், குழுப்பணி, குழுவை உருவாக்குதல் மற்றும் குழு திறன்கள், ஆளுமை மற்றும் சமூக நெறிமுறைகள் போன்றவற்றை வளர்ப்பதற்கான இத் தலைமைத்துவ நிகழ்ச்சியை மேற்பார்வையிட்டார்.
தலைமைத்துவ நிகழ்வில் விரிவுரைகள், உள்ளக மற்றும் வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் தலைமைத்துவத்தை உள்ளடக்கியதுடன் தலைமைத்துவம் பற்றிய அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கும், இளம் தலைமையின் திறமையை உறுதி செய்வதற்கும், யதார்த்தமான அணுகுமுறையின் மூலம் உறுதியான வழியில் தங்களை வளர்த்துக் கொள்ளவும் இது உதவுகிறது.
இலங்கை பொறியியல் படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி லெப்டினன் கேணல் எம்.டி.ஜே விக்கிரமாராச்சி யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு, கொட்டாவை வடக்கு தர்மபால வித்தியாலயத்தின் அதிபர் திரு.உதயருவன் மல்லிகாரச்சி அவர்களும் கலந்துகொண்டார். இறுதி பரிசளிப்பு விழாவில் பல சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் பங்கேற்றனர்.