Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th October 2024 20:44:08 Hours

டைரியில் காயமடைந்த சிப்பாயை லெபனான் ஜக்கிய நாடுகள் இடைக்கால படை தளபதி பார்வையிடல்

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தூதரகத் தலைவரும் படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் அரோல்டோ லாசரோ சான்ஸ், இலங்கைப் அமைதிகாக்கும் படையின் தளபதியுடன் இணைந்து லெபனானின் டைரி நகரில் உள்ள ஜபெல் அமெல் மருத்துவமனைக்கு 12 ஒக்டோபர் 2024 அன்று நகோராவில் உள்ள லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த போது மோதலில் காயமடைந்த சிப்பாய் ஒருவரின் நலன் விசாரிப்பதற்காக விஜயம் செய்தார்.

இவ் விஜயத்தின் போது, லெப்டினன்ட் ஜெனரல் லாசரோ சான்ஸ் காயமடைந்த சிப்பாயின் நலன் விசாரித்துடன் அவரது சிகிச்சை முறைகளை பற்றியும் அறிந்துகொணடார். லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை பணியாளர்களுக்கு உயர்தர சிகிச்சையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகளையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார். புறப்படுவதற்கு முன், சிப்பாயின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை பதக்கத்தை தளபதி பரிசாக வழங்கினார். மேலும், மருத்துவ ஊழியர்களின் முயற்சிகளுக்காக அவர் பாராட்டியதுடன் காயமடைந்த பணியாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அவர்களின் முக்கிய பணியைத் தொடர ஊக்குவித்தார்.