21st October 2023 22:19:03 Hours
இலங்கையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான டெக்னோமெடிக்ஸ் இன்டர்நேஷனல் (தனியார்) நிறுவனத்துடன் இணைந்து மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகம் புதன்கிழமை (ஒக்டோபர் 18) உயிரியல் மருத்துவ பொறியியல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான ஒரு நாள் பட்டறையை ஏற்பாடு செய்தது.
இதில் உயிரியல் மருத்துவ பொறியியல் துறையில் 8 அதிகாரிகள் மற்றும் 18 சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர்கள், சிரிஞ்ச் பம்பிகள் மற்றும் உட்செலுத்தல் பம்பிகள், டயதமி இயந்திரங்கள், இரத்த வாயு இயந்திரங்கள், எக்ஸ் ஈசிஜி இயந்திரங்கள், லேபரோஸ்கோப் மற்றும் எண்டோஸ்கோப் உட்பட பொதுவாகப் பயன்படுத்தப்படும் உயிரியல் மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு பற்றிய விரிவான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதே இந்த பட்டறையின் முதன்மை நோக்கமாகும்.
டெக்னோமெடிக்ஸில் இருந்து அனுபவம் வாய்ந்த மற்றும் தகுதி வாய்ந்த நிபுணர்களால் இந்த பட்டறை மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. இந்த முக்கியமான மருத்துவ சாதனங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து பங்கேற்பாளர்களுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவு வழங்கப்பட்டது.மேலும், கேள்விகளைக் கேட்கவும், சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
இந்த செயலமர்வு, இலங்கையில், குறிப்பாக ஒவ்வொரு இராணுவ மருத்துவமனையிலும் உயிரியியல் மருத்துவத்தின் வளர்ச்சியை ஆதரிப்பதில் தொழில்நுட்பவியலாளர்களின் அர்ப்பணிப்புக்கான சான்றாகும்.
இராணுவ உயிரியல் மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர்களின் பயிற்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்வதன் மூலம், இலங்கை இராணுவம் உயர் தரத்திலான மருத்துவ பராமரிப்புக்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் திறன் கொண்ட உயர் திறமையும் அறிவும் வாய்ந்த நிபுணர்களின் குழுவைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதில் டெக்னோமெடிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.