Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st August 2023 18:43:06 Hours

டிஎஸ்எம்டபிள்யூ சாம்பியன்ஷிப் 2023 கயிறு இழுத்தல் போட்டியில் இராணுவ குழு வெற்றி

போபே ராஜசிங்க தேசியக் கல்லூரியில் சனிக்கிழமை (ஜூலை 22) ஆரம்பமான டிஎஸ்பிஎம்டபிள்யூ கயிறு இழுத்தல் சாம்பியன்ஷிப் போட்டியின் போது இலங்கை இராணுவ கயிறு இழுத்தல் அணிகள் சிறப்பாக போட்டியிட்டன.

தேசிய மட்டத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் 15 ஆண்கள், 06 பெண்கள் மற்றும் 12 பாடசாலை அணிகள் போட்டியிட்டதுடன், இப் போட்டியில் இராணுவ ஆண் மற்றும் பெண் ஆகிய இரு அணிகளும் முதலாம் இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.

62 வது காலாட் படைபபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ அணிகளுக்கு பயிற்சி மற்றும் ஊக்கம் அளிக்கப்பட்டது.

15 வது ட்ரோன் இராணுவ பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூஏஎஸ்எம் விஜயலத் ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் அணிகளை மேற்பார்வையிட்டதுடன் பரிசளிப்பு விழாவின் போதும் கலந்து கொண்டார்.