04th August 2023 00:35:19 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவு மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படைணியின் சேவை வனிதையர் பிரிவும் இணைந்து அதிகாரிகள் மற்றும் பெண் வீரர்களுக்கு வாழ்க்கையின் அழகியல் அம்சங்களின் முக்கியத்துவம் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் வெள்ளிக்கிழமை (28) பனாகொடவில் பிரபல பாடலாசிரியர் திரு தம்மிக பண்டார தலைமையில் ‘செனஹஸ கெதெல்ல’ என்ற இசை நிகழ்ச்சியை நடாத்தினர்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக இராணுவ சேவை வனிதையர் பிரிவினருடன் கலந்து கொண்டு மங்கல விலக்கு ஏற்றியதுடன், 'தெரண' ஊடகத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் திரு.கயன் சஞ்சீவ மீகலாராச்சி அவர்களால் உரையும் ஆற்றப்பட்டது. இந்த அமர்வில் இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 800 க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் மற்றும் பெண் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
மன சமநிலை, பெண்மை, தொழில்முறை வாழ்க்கை சமநிலை, குறியீட்டு விளக்கங்கள், பாடல்களில் வெளிப்படுத்தப்பட்ட, வாழ்க்கை நடத்துவதற்கான இலக்கிய மதிப்பு, அன்பு மற்றும் பாசம், தாய்மை, காதல் போன்றவற்றை ஈர்க்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு, அந்த மெல்லிசைப் பாடல்கள் தோன்றியதற்கு அடிப்படைக் காரணங்கள் பற்றி பிரபல பாடலாசிரியர் விரிவாக விளக்கினார்.
நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், திருமதி ஜானகி லியனகே அவர்கள், அன்றைய பங்களிப்பைப் பாராட்டி, திரு தம்மிக்க பண்டாரவுக்கு சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் திருமதி ஹிமாலி புஸ்ஸல்ல, ஊடகப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் என் மஹாவிதான, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.