Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th June 2024 08:04:06 Hours

செல்லகதிர்காமம் கோதமேகமவின் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய கிணறு

பொசன் பண்டிகையை முன்னிட்டு 20 வது இலங்கை சிங்கப் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செல்லகதிர்காமம், கோதமேகமவில் உள்ள தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிணறு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வதுரவ ராஜமஹா விகாரையின் பிரதமகுருவான வண. தனகம தம்மரதன தேரர் கலந்து சிறப்பித்தார், இந்த திட்டம் 12 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் ஒருங்கிணைப்பின் கீழ் 'செத் சாதன மக சமாஜ சத்கார' அமைப்பின் நிறுவுனரும் தலைவருமான திரு.ரஜித் தென்னேகோன் அவர்களின் நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.