04th June 2024 18:21:08 Hours
05 மே 2024 அன்று விளையாட்டு அமைச்சின் உள்ளக விளையாட்டரங்கில் இலங்கை செபக்டக்ரா கழகம் ஏற்பாடு செய்திருந்த செபக்டக்ரா ஹூப் மற்றும் சோலோ போட்டி 2024 இல் இலங்கை இராணுவ வீரர்கள் தமது உயர் திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஹூப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் 'ஏ' இரு அணிகளும் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தன. மேலும், பெண்கள் 'பி' அணி ஹூப் நிகழ்வில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது, ஆண்கள் 'பி' அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. தனி நபர் போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையணியை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எஸ். பத்திரன வெற்றியீட்டியதுடன், ஆண்களுக்கான தனி நபர் நிகழ்வில் இலங்கை இராணுவ சேவைப் படையணியை சேர்ந்த கோப்ரல் டபிள்யூ.டி சொய்சா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
செபக்டாக்ரா கழக தலைவர் பிரிகேடியர் கே.ஏ.யு.கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில், அனைத்து பங்கேற்பாளர்களின் திறமையும் பார்க்க கூடியதாக காணப்பட்டது.