Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2024 16:31:37 Hours

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் 56 மற்றும் 59 வது காலாட் படைப்பிரிவினரால் மனிதாபிமான உதவி

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வவுனியா மாவட்டத்தில் 29 நவம்பர் 2024 அன்று சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவுவதற்காக மனிதாபிமான உதவித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த முயற்சிக்கு மனுசத் தெரண மற்றும் அனுசரனையாளரான திரு.மகேஷ் ஜயவர்தன ஆகியோர் அனுசரணை வழங்கினர்.

நிகழ்ச்சியின் போது, கந்தசாமிநகர் விபுலானந்த வித்தியாலயம் மற்றும் கல்லாறு ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கியுள்ள 117 நபர்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

வவுனியா பிரதேச செயலக 208 பி பகுதியில் வசிக்கும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் எதிர்நோக்கும் உடனடி இன்னல்களைப் போக்குவதற்கு இந்த திட்டம் உரிய நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது.

56 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 562 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டிடபிள்யூஜீடிஎம் அமரசிங்க ஆர்எஸ்பீ பீஎஸ்சீ, மற்றும் 17வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் வசந்தபுரத்தில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 பொதுமக்களுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்ச்சி மண்ணங்கண்டல் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த முயற்சிக்கான அனுசரணையை மனுசத் தெரண வழங்கியுள்ளதுடன், 593 வது காலாட் படைப்படைப்பிரிவின் 6 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் டயலோக் ஆக்ஸியாட்டா இணைந்து நிகழ்வை ஏற்பாடு செய்தன. இந்நிகழ்வில் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, புதுக்குடியிருப்பு உதவிப் பிரதேச செயலாளர் திரு எஸ் ஜெயகாந்தன், முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் திரு கோகுலராஜ் மற்றும் மனுசத் தெரண மற்றும் டயலொக் ஆக்சியாட்டாவின் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.