Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th October 2023 12:19:13 Hours

சீனாவில் இடம் பெற்ற ஈட்டி எறிதலில் இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு வெள்ளி பதக்கம்

இன்று (ஒக்டோபர் 25) காலை சீனா ஹாங்சோ நகரில் நடைபெற்ற 4 வது ஆசிய பரா விளையாட்டுப் போட்டிகள் 2023 இல் பரா ஈட்டி எறிதல் எப்-44 (தூரம் - 64.09 மீ) நிகழ்வில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II, கே.எ சமித்ததுலான் அவர்கள் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, 6 இராணுவ பரா தடகள வீரர்கள் ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். 2023 ஆம் ஆண்டுக்கான பரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனா ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகின்றன, மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பரா தடகள வீரர்கள் போட்டியிடுகின்றனர்.

4 வது ஆசிய பரா விளையாட்டு 2023 ஒக்டோபர் 22 தொடங்கி 28 ஒக்டோபர் 2023 வரை நடைப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.